துயிலுமில்ல காணி பிடிப்பு நல்லிணக்கமாம்!

 


ஒருபுறம் நல்லிணக்கம் பேசியவாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு வழங்குவதற்கு நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி இன்று (02) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நில அளவை திணைக்களத்தினர், மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், பொது மக்கள் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதி மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போது இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

அதனால் துயிலுமில்லக் காணியின் வெளிப்புறத்திலேயே வருடா வருடம் மாவீரர் நாளில் உறவுகளால் அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


No comments