140 மீற்றர் பிரஞ்சு பக்கேற்றை உருவாக்கி சாதனை படைப்பு!!


பிரஞ்சு வெதுப்பக குழுவினரால் 140 மீற்றர் நீளமுள்ள பக்கேற்றை(baguette) உருவாக்கி புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.

சாதனையின் பின்னர் இவ்வெதுப்பி (பாண்) வீடற்றவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது.

பாரிஸின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ஃபிரெஞ்ச் நகரமான சுரேஸ்னெஸில் 18 பேர் கொண்ட குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை 143.53 மீட்டர் நீளமுள்ள (461 அடி நீளம்) பக்கேற்றை உருவாக்கி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தது.

இதற்கு முன் கடந்த ஐந்தாண்டுகளாக இத்தாலியின் கோமோவைச் சேர்ந்த குழுவினர் இச்சாதனையைப் படைத்து தங்கள் வசம் வத்திருந்தனர். இச்சாதனையை பிரான்ஸ் தற்போது முறியடித்துள்ளது.

இந்த வெதுப்பிக்கு 90 கிலோ மாவு, 60 லிட்டர் தண்ணீர், 1.2 கிலோ உப்பு மற்றும் 1.2 கிலோ ஈஸ்ட் பயன்படுத்தப்பட்டது. இதன் நிறை 152 கிலோ கிராம் ஆகும். இந்த வெதுப்பியின் சுவைக்காக அதிகாலை 3 மணிக்கு மாவைப் பிசையத் தொடங்கியதாக அக்குழு தெரிவித்தது.

இந்த பக்கேற்றை மெதுவாக நகரும் சங்கரங்கள் கொண்ட போறனை அடுப்பின் மூலம் இந்த வெதுப்பி சுடப்பட்டது.

 

No comments