கம்போடியாவில் 20 இராணுவத்தினர் பலி!
கம்போடியா தலைநகர் புனோம் பென்னுக்கு மேற்கே உள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
கம்போடியாவில் இராணுவ முகாமில் அமைந்திருந்து வெடிமருந்து கிடங்கில் இருந்து டிரக் வாகனத்தில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக அங்கு அனர்த்தம் ஏற்பட்டது.
இதில் 20 இராணுவத்தினர் உயிழந்தனர். மேலும் அங்கிருந்து நான்கு கட்டிடங்கள் இடிந்து அழிந்தன.
இந்த வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் சேதமடைந்த கட்டிடங்கள், அவற்றின் கூரைகளில் துளைகளுடன் கூடிய வீடுகள் மற்றும் புகை இன்னும் எழுவதைக் காட்டியது.
வெடிமருந்து வெடிப்பு சம்பவம் குறித்த செய்தியைப் பெற்று நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று ஹன் மானெட் ஃபேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மற்றும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
இறந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளை அவசரமாக ஏற்பாடு செய்யுமாறு பாதுகாப்புத் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஹன் மானெட் கூறினார்.
கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 20,000 டொலர்கள் வழங்கப்படும் என்றும், காயமடைந்த வீரர்கள் 5,000 டொலர்கள் பெறுவார்கள் என ஹன் மானெட் கூறினார்.
Post a Comment