ஒரே பாலின திருமண மசோதா தாய்லாந்தில் நிவேறியது!


ஒரே பாலின திருமண மசோதாவை தாய்லாந்து அரசியல்வாதிகள் நிறைவேற்றியதையடுத்து, சம திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து திகழ்கிறது.

தாய்லாந்துப் பாராளுமன்றத்தின் கீழவையானது இன்று புதன்கிழமை இறுதி வாசிப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 400 பேரும், எதிராக 10 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மூன்றாவது ஆசிய நாடாக தாய்லாந்து இருக்கும்.

இந்த மசோதாவுக்கு இப்போது நாட்டின் செனட்டின் ஒப்புதல் தேவைப்படுகிறது. மேலும் சட்டமாக மாறுவதற்கு முன்பு இறுதியாக மன்னரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். இது அரச அனுமதி பெற்ற 120 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும்.

No comments