யேர்மனி மருத்துவமனையில் பெண்ணை சுட்டுக் காயப்படுத்திய காவல்துறையினர்
மேற்கு ஜேர்மனிய மாநிலமான நார்த்-ரைன் வெஸ்ட்பாலியாவில் உள்ள ஆச்செனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் ஒரு மணி நேரம் நீடித்த போராட்டம் திங்கள்கிழமை பிற்பகுதியில் முடிவுக்கு வந்தது.
மருத்துவமனையில் புகை கண்டறியப்பட்டது. திங்கட்கிழமை மதியம் ஜேர்மனியின் ஆச்சென் நகரில் லூயிசன் மருத்துவமனைக்குள் பெண் நுழைந்தார்.
குறித்த பெண் தோட்டாக்கள் இல்லாத வெற்றுத் துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் மருத்துவமனைக்குள் பிசியோதெரபி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை மிரட்டினார். அப்போது, அப்பகுதியில் புகை மூட்டம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை சிறப்புப் படைகளை அந்த இடத்திற்கு அனுப்பியது. அந்த பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் இருப்பதாக அவர்கள் நம்பினர்.
காவல்துறையினர் அப்பெண்ணை சுட்டுக் காயப்படுத்தினர். இதனையடுத்து குறித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
Post a Comment