மதங்களால் பிரிக்கமுடியாது
தமிழர் தேசம் மதங்களால் பிளவுபடுத்தப்படமுடியாததொன்றென மீண்டும் உறுதியாகியுள்ளது.
சாந்தனின் உடலம் அவரது குடும்பத்தினரிடையே கையளிக்கப்பட்ட நிலையில் திருமலை ஆதீனம் மற்றும் நல்லூர் சிவருகு ஆதீனத்தின் ஓம் நமச்சிவாய மந்திரத்தின் மத்தியில் அஞ்சலிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை குருமுதல்வர் தலைமையில் வருகை தந்திருந்த மத பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களுடன் தவத்திரு வேலன் சுவாமிகளும் இணைந்து பிரார்த்தனையினை நடாத்தியிருந்தார்.
இதனிடையே யாழப்பாணத்தில் எதற்கெடுத்தாலும் முன்னால் நிற்கும் யாழ்.பல்கலைக்கழக புத்திசீவிகள் எவரும் வருகை தந்திருக்கவில்லை.
அதே போன்று கூட்டமைப்பின் தலைவர்களுள் சிறீதரன் மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் தவிர்ந்த எவரும் அஞ்சலியில் பங்கெடுத்திருக்கவில்லை.
Post a Comment