ஒலிம்பிக் போட்டிகளின் போது லூவ்ரே அருங்காட்சியகம் முன் ஒலிம்பிக் தீபம் எரிக்கப்படும்


ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பாரிஸ் விளையாட்டுகளின் காலத்திற்கு லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு எதிரே உள்ள டுயிலரீஸ் முன்றலில் ஒலிம்பிக் சுடர் எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதி பாரிஸ் நகரத்தின் மையத்தில் இச்சுடர் வைக்கப்பட வேண்டும் என்ற முடிவு பலவாரங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாம் பயணிகள் எளிதாக இதனைப் பார்க்ககூறிய வகையிலும், 24 மணி நேரம் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதால் மோனாலிசா ஓவியம் அமைந்துள்ள உலகின் மிகப் பொிய லூவ்ரே அருங்காட்சியகத்தின் முற்றத்தில் வைக்க இடம் தேர்ந்தெடுக்பட்டது.

இதே நேரம் ஈபிள் கோபுரத்தில் சுடர் வைக்கப்படலாம் என்று ஊகங்கள் எழுந்தன.

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது கொப்பரை விளக்கேற்றுவது ஒரு முக்கிய தருணமாகும். 

No comments