வெள்ளைக் கொடியை உயர்த்த உக்ரைனுக்கு தைரியம் வேண்டும்: போப்பின் கருத்தைக் கண்டித்து உக்ரைன்
ரஷ்யாவுடனான போரை நிறுத்த உக்ரைன் வெள்ளைக்கொடியை உயர்ந்துவதற்கு துணிச்சல் வேண்டும் என்ற போப் பிரான்சிஸ் அவர்களின் கோரிக்கையை உக்ரைன் கடுமைாயாக நிராகரித்தது.
போப் அவர்கள் வானொலி ஒன்றுக்கு இம்மாத இறுதியில் அளித்த நேர்காணல் ஒன்றில் இக்கருத்தை தெரிவித்திருந்தார்.
பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணல் சுவிஸ் ஊடகமான RSI உடனான நேர்காணலிலேயே போப் இக்கருத்தை வெளியிட்டார். இந்த ஒளிபரப்பு கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மார்ச் 20 அன்று ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
போப் வெளியிட்ட கருத்துக் குறித்து உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்:
உக்ரைன் நாட்டின் கொடியின் நிறம் நீலம் மற்றும் மஞ்சள். இதைத் தவிர வேறு எந்தக் காெடியையும் உக்ரைன் உயர்த்தப் போவதில்லை என்று கூறினார்.
உக்ரைனின் மக்களின் நிலையைச் சிந்தித்து சூழ்நிலையை அவதானித்து வெள்ளைக்கொடியை உயர்த்தி பேச்சுவார்த்தையை நடத்துபவர் வலிமையானவர் என்று போப் கூறியிருக்கிறார்.
போப் அவர்களின் கருத்துக்கு பல விமர்சனங்கள் எழுத்துள்ள நிலையில், போப்பின் கருத்து சரணடைதல் அல்ல, பேச்சுவார்த்தை மூலம் ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவருவது குறித்தே அவர் பேசினார் என்று வத்திக்கான் செய்தித்தொடர்பாளர் மேட்டியோ புருனி விளக்கம் அளித்துள்ளார்.
"பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் சரணடைவதில்லை" என்று போப் தெளிவுபடுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
ரஷ்யாவின் முழு அளவிலான தாக்குதலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உக்ரைன் தற்காப்பு நிலையில் உள்ளது. கடந்த மாதம் ரஷ்ய துருப்புக்கள் மூலோபாய நகரமான அவ்திவ்காவைக் கைப்பற்றினர்.
அப்போதிருந்து, ரஷ்யப்படைகள் மேலும் மேற்கு நோக்கி முன்னேறி, பல கிராமங்களை கைப்பற்றினர்.
அமெரிக்கா உக்ரைனுக்கு $60bn (£47bn) வழங்குவதற்கான மசோதா அமெரிக்க காங்கிரஸில் தடுக்கப்பட்டது மற்றும் ஐரோப்பிய நாடுகள் கெய்வை ஆதரிப்பதற்கான வழிகளில் உடன்பட முடியாமல் போராடி வருகின்றன.
Post a Comment