உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிராக புங்குடுதீவில் போராட்டம்


உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. 

கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை முற்றாக புறக்கணித்து இலாப நோக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் , தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கும் கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்குரிய அனுமதிகளை கடற்தொழில் அமைச்சு வழங்குவதற்கு எதிராகவும் பாரம்பரிய மீன்பிடி தொழிலை அழிப்பதற்கு எதிராகவும் ,

புங்குடுதீவில் நடைபெற்றுவருகின்ற சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாக தடுக்கக்கோரியும் 

புங்குடுதீவு கிராமத்தில் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்ற கால்நடை வளத்தை பாதுகாக்க கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 




No comments