சாந்தன் உடலுக்கு திருமாவளவன், சீமான், நளினி அஞ்சலி

மாரடைப்பால் உயிரிழந்த சாந்தன் உடலுக்கு நளினி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின்

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சாந்தனின் பூதவுடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சாந்தனின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

No comments