சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்

தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில்

அணிதிரண்டெழுந்தார்கள் தமிழர்கள்.

ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழியில்  சிறிலங்கா துதுவராலயத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராஜதந்திர  கட்டமைப்பு மற்றும் ஈழத்தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். 

பிரித்தானியா மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் மக்கள் எழுச்சியுடன் பேரணியில் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா துதுவராலயத்திற்கு முன்பாக தொடங்கிய பேரணியானது பாரளுமன்ற சதுக்கத்தில் இளைய செயற்பாட்டாளர்களின் எழுச்சி மிகுந்த பேச்சு போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தியது.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் மற்றும் தமிழீழம் கிடைக்கும் வரை பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு பேரணி நிறைவடைந்தது.




No comments