மூன்றாம் சார்லஸ் மன்னர் புற்றுநோயால் பாதிப்பு


பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒரு வகையான புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று என்று பக்கிங்ஹாம் அரண்மனை திங்கட்கிழமை அறிவித்தது.

விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்டுக்கான சிகிச்சையின் பின்னர் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல என்று அரண்மனை ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.

மன்னர் அவரது சிகிச்சை குறித்து முற்றிலும் நேர்மறையாக இருக்கிறார். மேலும் கூடிய விரைவில் முழுமையான பொதுப் பணிக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறார் என்று அரண்மனை கூறியுள்ளது.

சிகிற்சையின் போது அவர் பொது நிகழ்வுகளை ஒத்தி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

மன்னார் இல்லாத நேரத்தில் மற்ற மூத்த அரச குடும்பங்கள் அரச பொறுப்புகளை ஏற்க வாய்ப்புள்ளது.

இச்செய்தி வெளியானதையடுத்து மன்னரின் மாட்சிமை முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வாழ்த்துகிறேன் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எக்ஸ் தளத்தில் எழுதினார்.

No comments