இஸ்ரேலின் தாக்குதல் வேவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ஹிஸ்புல்லா


லெபனான் நாட்டுக்குள் வேவு பார்த்து தாக்குதல் நடத்தும் ஹெர்ம்ஸ்-450 என்ற ஆளில்லா வேவு விமானத்தை தரையிலிருந்து தாக்கும் ஈரானின் தயாரிப்பான 358 சாம் என்ற ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது ஹிஸ்புல்லா அமைப்பு.

இஸ்ரேலிய ஆளில்லா விமானம் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை படுகொலை செய்ய முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுவீழ்த்தப்பட்ட இஸ்ரேலின் ஹெர்ம்ஸ்-450 ஆளில்லா விமானத்தின் பெறுமதி 2 மில்லியன் அமொிக்க டொலர்களுக்கு மேலாகும். ஈரானால் தயாரிக்கப்பட்ட 358 சாம் ஏவுகணையின் பெறுமதி 50 ஆயிரம் டொலர்களாகும். இந்த ஏவுகணை வானில் இலக்கைக் கண்டுப் பிடிக்கும் வரை அலைந்து திரியும் திறன் கொண்டது.

No comments