அச்சுவேலி பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்.


யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு செல்லாதமையால் பொலிஸார் வீதியில் தன்னை கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலை பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளார். 

 சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments