எயிட்ஸை தடுப்போம் மன்னாரில் விழிப்புணர்வுப் பேரணி!!
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு 'சமூகத்தை வலுப்படுத்துவோம்; எயிட்ஸை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று புதன்கிழமை (06) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய பாலியல் நோய்கள், எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
இன்று காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமான இப்பேரணி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியை சென்றடைந்து, பின்னர், அங்கிருந்து மன்னார் பஸார் வீதியூடாக பொது விளையாட்டு மைதான வீதியை கடந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், பணியாளர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்கள், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணி பயணித்த வழிகளில், குறிப்பாக, மக்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் துண்டுப் பிரசுர விநியோகம் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
Post a Comment