சீர்திருத்தப்பள்ளி சிறவன் மரணம் கொலையா?மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரியவந்ததுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலை கிழக்கு மாகாணம் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் 17 ஆம் திகதி கல்முனை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் புதன்கிழமை (29)அதிகாலை 3.30  மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக சிறுவனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவரின் தகப்பனார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments