இஸ்ரேல் சென்ற கப்பல்கள் ஹவுதி போராளிகள் டிரோன் தாக்குதல்: சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா இராணுவம்


செங்கடல் ஊடாக இஸ்ரேலுக்குச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதிப் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

ஹவுதி போராளிகள் ஏவிய ஆளில்லா டிரோன்கள் மூன்றைச் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது.

ஏற்கனவே ஹவுதி போராளிகள் இஸ்ரேலிய கப்பல்களான யுனிட்டி எக்ஸ்ப்ளோரர் மற்றும் நம்பர் 9 மீது தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியிருந்தனர்.

பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்ற ஏமன் நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கோரிக்கைகள் விடுத்த நிலையில் அவர்களின் கோரிக்கைளுக்கு பதிலளிக்கும் வகையில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி போராளிகளின் பேச்சாளர்  தெரிவித்தார்.

ஏற்கனவே இஸ்ரேலுக்குச் சென்ற முதலாவது கப்பலை அவர்கள் கடத்திச் சென்றனர். இரண்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தினர். மூன்றாது கப்பல் கடத்தப்பட்ட நிலையில் அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் அக்கப்பல் மீட்கப்பட்டது. கடத்தல் காரர்களும் இஸ்ரேல் நோக்கி கொண்டு செல்லப்பட்டனர். இக்கப்பலை ஹபோரளிகள் சிறைப்பிடிக்கவில்லை என்றும் வேறு ஒரு குழுவால் கடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பஹாமாசின் கொடியுடன் இஸ்ரேல் நோக்கிப் பயணித்த யூனிட்டி எக்ஸ்ப்ளோரர் என்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்பட்டுள்ளது.

அமெரிக்க ஏவுகணைகள் டிரோனைச் சுட்டு வீழ்த்திய போதும் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைவிட பனா கொடியுடன் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

ஈரானின் ஆதரவுடன் ஏமன் தலைநகரையும் ஏனைய பகுதிகளையும் ஹவுதிபோராளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

No comments