இனி மாகாணசபைக்கு காவல்துறை!
மாகாணசபைகளிற்கு காவல்துறை அதிகாரத்தை வழங்கி அதிகார பரவலை முன்னெடுக்க தெற்கில் குரல்கள் எழத்தொடங்கியுள்ளது.
மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதியும் மற்றும் அமைச்சரவையும் தேவையும் இல்லை.
அநேகமானோர் மாகாண சபையை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1வீதமளவே செலவாகுகின்றது” எனவும் தெரிவித்தார்.

Post a Comment