கோத்தாவிற்கு ஒத்துழைக்க மறுத்தவருக்கு பிணை!முன்னாள் ஜனாதிபதிகள் கொலைச் சதி தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா கொழும்பு கோட்டை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் காவல்துறை அத்தியட்சகர் ஒருவரையும் கொலை செய்வதற்கு சதி மேற்கொண்டதாக பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக்க டி சில்வா மீது  2019 ஆம் ஆண்டு  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானதல்லவென சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.இதனையடுத்து, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்

No comments