சானியை கொல்ல பிள்ளையானுடன் டீலா??

 


ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சுரேஸ் சாலே இனவாத பௌத்த பிக்கு ஒருவருடன்  இரகசியமாக சந்தித்தாக அம்பலமாகியுள்ளது.

மட்டக்களப்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதலின் பின்னணியுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு என சனல் 4 ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு உயர் அதிகாரியான சுரேஸ் சாலே, பிள்ளையான் மற்றும் இனவாத பௌத்த பிக்கு ஆகியோருக்கு இடையில்இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ரணிலின் விசுவாசியான குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதானி சானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றின் எதிரில் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் சந்திப்பினை தொடர்ந்து பிள்ளையான் மூலம் சானி அபேசேகரவை இலக்கு வைக்க முயற்சிகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


No comments