யாழ்.மாவட்ட செயலக சூழலில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும், அதன் சுற்று சூழலிலும் டெங்கு சிரமதான நடவடிக்கை இன்றையதினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்க யாழ்.மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அழைப்பு விடுத்திருந்தார்.
யாழ்.மாவட்டத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையிலையே சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், நாளைய தினம் வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment