யாழில். நுளம்புக்கு புகைப்போட முற்பட்டவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழப்பு
நுளம்புக்கு புகை போட முற்பட்டவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி நுளம்புக்கு புகைப்போட , புகை சட்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முற்பட்டுள்ளார். அதன் போது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
Post a Comment