இஸ்ரேலின் படுகொலைகளுக்கு வெள்ளை அடிக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 28 நாளாகவும் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் சர்வதேச சட்டங்களை மீறி மிகக் கொடூரமான தாக்குதல்களை ஹமாஸ் போராளிகளை இலக்கு வைப்பதற்காகக் கூறி பாலஸ்தீனிய மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவருகிறது. தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமம், மருத்துகள் இல்லாமல், தொலைத் தொடர்புகள் இல்லாமல், எரிபொருள் இல்லாம், மின்சாரம் இல்லாம், இன்ரநெட் இல்லாமல் ஒரு முற்றுகைக்குள் பாலஸ்தீனக் குழந்தைகள் பெண்கள் உட்பட 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போரை நிறுத்தக்கோரும் ஐ.நா. மற்றும் அரபு நாடுகளின் அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அதோடு காசா மீது தரை, கடல், வான் என 3 வழிகளிலும் தாக்குதல்களை நடத்திவருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது. அதன்படி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது, படைகளை னுப்புவது போன்ற உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. இதனால் போரை வழிநடுத்துவதே அமெரிக்கா தான் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் செய்யும் மனித நேயத்திற்கு எதிரான படுகொலைகளுக்கு வெள்ளை அடிப்பதில் அமொிக்காவும் மேற்கு நாடுகளும் ஈடுபகின்றன. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

ஹமாஸ் வேண்டுமென்றே ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. ஹமாஸ் போராளிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு அடியில் வைக்கிறது. இது நம்பமுடியாத அளவிற்கு சவாலானது என்று இஸ்ரேல் செய்யும் படுகொலைகளுக்கு வெள்ளை அடித்துள்ளார். இவரும் ஒரு யூதல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments