கதிரை யாருக்கு:சர்ச்சை ஆரம்பம்?
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது பதவியை துறக்க வேண்டுமென கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளமை கட்சியில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது.

“288 நாடாளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் நாடாளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார்.

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு நாடாளுமன்ற சம்பளமாக 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 4 இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார்.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள்.

அவர்கள் தனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது.

ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இரா.சம்பந்தன் பதவி விலகினால் அவ்விடத்திற்கு யாரை நியமிப்பதென்பதில் சர்ச்சைகள் கட்சியில் மூண்டுள்ளது.

 
No comments