கப்பலோடிய மறவன்புலோ!
நாகப்பட்டினம் - காங்கேயன்துறை கப்பல் சேவை தொடக்க விழா இன்று நடந்தேறியுள்ள நிலையில் அம்முயற்சிக்கு யாழ்ப்பாணத்தில் பலரும் உரிமை கோரத்தொடங்கியுள்ளனர்.
இதனிடையே கப்பல் சேவையின் மையமாக செயற்பட்ட மறவன்புலோ சச்சிதானந்தத்தை தமிழ் நாடு மற்றும் இந்திய அரசுக்கள் இன்று கௌரவித்துள்ளன.
நடுவண் அமைச்சர் சர்வானந்தா சொனோலியா,தமிழக அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு ,தமிழ்நாடு கடல்சார் வாரியத் துணைத் தலைவர் மா அன்பரசன் என பலரும் பங்கெடுத்த நிகழ்விலேயே மறவன்புலோ கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள சிவதலங்களில் வழிபாட்டை மேற்கொள்ள கப்பல் போக்குவரத்து சேவை தேவையென பலவருடங்களாக போராடிய மறவன்புலோ சச்சிதானந்தன் டெல்லிவரை பல முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment