பாடசாலையில் மின்விசிறியில் மோதி மாணவன் உயிரிழப்பு


புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

பாடசாலை மைதானத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, குறித்த மாணவன் வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியபோது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதியுள்ளான். 

அதன் போது படுகாயமடைந்த மாணவனை புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் உயிரிழந்துள்ளான். 

கிலென்லொக் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும், புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர். 

No comments