நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிது நேரத்திலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனமொன்றில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments