சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது


சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

“சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கைகள் எதுவும் இல்லை. வெளிநாட்டுக் கடன்களை மேம்படுத்தும் பணியும் விரைவில் நிறைவடையும்.

வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

எனவே வெளிநாட்டுக் கடன் மேம்படுத்தலும் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கின்றோம். மேலும் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் நாட்டுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments