தொல்லியல் திணைக்கள பணிப்பாளரை பதவி நீக்குங்கள்!


தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் முகமாகவும் நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர், ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே , அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  முன்னாள் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இவை நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தெரிவிக்கப்படுகிறது. அவை மிக மோசமான நிலைமைகளை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதனை நிறுத்த வேண்டும்.

தொல்லியல் திணைக்கள பணிப்பாளரின் செயற்பாடு நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்துகின்றமை மட்டுமல்ல, நீதித்துறையை மதிக்காத செயற்பாடும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிடின், ஐனாதிபதி தேசிய நல்லிணக்கத்தை பேணி காக்க இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்க வேண்டும் என்றார்.

No comments