தாயையும் 11 மாத குழந்தையையும் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இராணுவ சிப்பாய் சிறையில் உயிர்மாய்ப்பு!


அங்குருவத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாயையும் அவரது பதினொரு மாத பெண் குழந்தையையும் கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் நேற்று பிற்பகல் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வரகாகொட சல்கஸ் வத்த மாவத்தை பகுதியில் வசிக்கும் ஏ.ஏ.டி. பிரியாத் மதுரங்க என்பவராவார்.

அங்குருவாதோட்ட ஊருதுடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத குழந்தை டஸ்மி திலன்யா ஆகியோரை கொலை செய்தமை தொடர்பில், சந்தேகநபர் அகுருவாதோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

No comments