கேபிள் காரில் சிக்கியிருந்த 78 பேர் மீட்பு!!


ஈக்குவடாரில் மிக உயரமான சுற்றுலா கேபிள் கார்களில் சிக்கிய 78 பயணிகள் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3100  மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதியில் இரண்டரை கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய கேபிள் கார்கள் இயந்திரக் கோளாறு காரணமாக பழுதாகி அந்தரத்தில் நின்று விட்டன. இக்கோளாறு காரமாக 78 பேர் கேளிள் காரில் சிக்கியிருப்பதாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் உயரத்தில் சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு தரைக்குக் கொண்டு வந்தனர்.

மீட்புப் பணியில் காவல்துறையினர், தீயணைப்பு படைவீரர்கள், மருத்துவர்கள், மலை ஏறும் உயர் குழுக்கள் என 60 அவசரகால பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

உலகின் மிக உயரமான கேபிள் கார் அமைப்புகளில் ஈக்குவடோர் கேபிள் காரும் ஒன்றாகும். 

கடல் மட்டத்திலிருந்து 3,947 மீட்டர் (12,950 அடி) உயரத்தை இக்கேபிள் கார் அடைகிறது. இது தென் அமெரிக்காவின் மிக உயரமான கேபிள் கார்களில் ஒன்றாகும் என்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது.

கேபிள் காரில் சவாரி 18 நிமிட பயணத்தில் 2,500 மீட்டர் (சுமார் 1.55 மைல்கள்) பயணிக்கிறது. இது குய்ட்டோ நகர காட்சி மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அழகான காட்சியை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது.




No comments