உதயநிதி ஸ்டாலினை சந்தித்த செந்தில் தொண்டமான்


இந்தியாவுக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்றைய தினம் புதன் கிழமை தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினைச்   சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாகத் தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும்  அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருவதாகவும்  செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது  இலங்கையின் பொருளாதாரம், எதிர்கால திட்டங்கள், வட கிழக்கு & மலையகத் தமிழர்களின் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments