சக பூசகர்களின் கைபேசிகளை திருடிய குற்றத்தில் பூசகர் கைது


சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள் களவாடப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. 

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் , பூசகர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , ஆலயத்தில் அன்றைய தினம் நின்ற 25 வயதான பூசகர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments