ஜனாதிபதி ரணிலின் இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் குறித்து முன்னணி அதிருப்தி!


குருந்தூர் மலை விகாரை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு வேறுப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்த, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக குருந்தூர் மலை விகாரை, தமிழ் பௌத்தர்களுக்குரியது என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எனினும், தற்போது அந்த விகாரைக்கு அருகில் உள்ள காணிகளை எவருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது என்று கூறுகிறார்.

இந்தநிலையில், குறித்த காணி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் வருகின்ற நாட்டின் ஜனாதிபதிகளால் மீண்டும் விகாரைக்கு சொந்தமாக்கப்பட்டு அது, சிங்கள குடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

No comments