மனிதவுரிமை ஆணைக்குழுவில் வாக்கு மூலம் அளித்த மருதங்கேணி பொலிஸார்!
மருதங்கேணியில் பாராளுமன்ற உறுப்பினரை தாக்கியமை தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் புதன்கிழமை நான்கு மணி நேரமாக வாக்குமூலம் வழங்கினர்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருப்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
Post a Comment