கிரேம்ளின் மீது டிரோன் தாக்குதல்: உயிர் தப்பினர் புனின்!!


ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் புடினின் வதிவிடமான அரச அதிபர் மாளியை இலக்கு வைத்து இரண்டு டிரோன்களால் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைக் கொல்லும் நோக்கத்துடன் ட்ரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது,

தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் அங்கு ரஷ்ய அதிபர் புடின் இருக்கவில்லை அத்துடன் கிரெம்ளினுக்கு எந்த பொருள் சேதமும் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிரெம்ளினுக்கு எந்த பொருள் சேதமும் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிரெம்ளின் இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்றும், வெற்றி தினமான மே 9 அணிவகுப்புக்கு முன்னதாக ஜனாதிபதியை படுகொலை செய்யும் முயற்சி என்றும் மதிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதலை தொடர்ந்து புடினின் நாளாந்த வேலைகளில் எந்தவொரு மாற்றங்களும் இருக்காது. அவை வழமை போன்று இருக்கும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனின் இத்தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியல் உறுதியளித்தது போல் இரண்டாம் உலகப்போரின் வெற்றிவிழா அணிவகுப்பு நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் உக்ரைன் அதிபரை ஜெலென்ஸ்கியை அகற்ற அழைப்பு விடுத்தார். 

அத்துடன் கிய்வ் பயங்கரவாத ஆட்சியை நிறுத்தும் மற்றும் அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் கோருவோம் என்று ரஷ்ய டுமா மற்றும் புட்டின் கூட்டாளியின் பேச்சாளர் வியாசெஸ்லாவ் வோலோடின் கூறினார்.

மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் தனது நாட்டிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறுத்துள்ளார்.

இது புடினின் உயிரை கொல்லும் முயற்சி என்று ரஷ்யா முத்திரை குத்தியுள்ளது.

ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் புதன்கிழமை அவர் நோர்டிக் தலைவர்களை சந்தித்தபோது, ​​ஜெலென்ஸ்கி நாங்கள் புடினைத் தாக்கவில்லை என்றார்.

நாங்கள் புட்டினை நீதிமன்றத்திடம் விட்டுவிடுகிறோம். நாங்கள் எங்கள் பிரதேசத்தில் போராடுகிறோம். நாங்கள் எங்கள் கிராமங்களையும் எங்கள் நகரங்களையும் பாதுகாக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

நாங்கள் புடினையோ அல்லது மாஸ்கோவையோ தாக்கவில்லை. அதற்கு போதுமான ஆயுதங்கள் எங்களிடம் இல்லை என்றார்.

உக்ரைனின் இத்தாக்குதலுக்கு கண்டித்த ரஷ்யா பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தது.

No comments