துருக்கி தேர்தல்: மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் எர்டோகனை ஆதரித்தார்


துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியாளரும் தீவிர தேசியவாத வேட்பாளருமான சினான் ஓகன் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுக்குப் ஆதரவை வழங்கியுள்ளார்.

எர்டோகனை அல்லது அவரது முக்கிய சவாலான கெமல் கிலிக்டரோக்லுவை ஆதரிப்பாரா என்பது ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை. மே 14 அன்று நடந்த தேர்தலின் முதல் சுற்றில் ஓகன் 5.2% வாக்குகளைப் பெற்றார்.

மே 28 ஆம் நாள் நடைபெறும் இரண்டாவது சுற்று தேர்தலில் மக்கள் கூட்டணி வேட்பாளர் ரெசெப் தையிப் எர்டோகனை நாங்கள் ஆதரிப்போம் என்று திங்களன்று தேசிய தொலைக்காட்சியில் ஓகன் கூறினார்.

No comments