நான் உண்மையான சிங்களபௌத்த பிரஜை!

 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பொரளையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது. போராட்டம் காரணமாக பொரளை சுற்றுவட்டாரத்திற்கு அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில் கொழும்பில் மீண்டும் சிங்களபேரினவாதத்தின் கர்ஜனைகள். நீ சிங்கள கொட்டியா என இனவாதம் கக்கியவர்களின் முகத்திற்கு நேரே இல்லை நான் உண்மையான சிங்களபௌத்த பிரஜை என எதிர்த்துக் குரல் கொடுத்த சிங்கள சகோதரிக்கும் தோளோடு தோள்நின்று இன்றைய நிகழ்வை கொழும்பில் சாத்தியமாக்கிய சிங்கள சகோதரர்களிற்கும் நன்றிகள்

No comments