ஊன் உருக அஞ்சலி!



முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் 14வது வருடமாக இன்றும். தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதான நிகழ்வு  இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட இறுதி யுத்த களமான முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்களை நினைவு கூர்ந்து மதததலைவர்கள் மற்றும் போர்தின்ற குடும்ப பிரதிநிதிகள் இணைந்து பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வடகிழக்கு தமிழர் தாயகமெங்குமிருந்து திரண்டு வருகை தந்திருந்த ஆயிரமாயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் முஸ்லீம் பிரதிநிதிகளும் வவுனியாவில் சிங்கள பிரதிநிதிகளும் அஞ்சலியில் இணைந்து கொண்டனர். 

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றிருந்தது.

இதனிடையே தடைகளை மீறியும் கொழும்பு பொரளை பிரதேசத்திலும்; முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

இடத்துக்கு வந்த மற்றுமொரு தரப்பினர் அந்த நிகழ்வை நடத்த வேண்டாம் என்று கூறியதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறையினர், இராணுவத்தினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தடைகளை மீறியும் கொழும்பு பொரளை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது

மனித சங்கலி பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டு அதனுள் நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டது



No comments