பெல்கொரோட் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது புடினுக்கு எதிரான ரஷ்யக் குழு!


ரஷ்யா - உக்ரைன் எல்லையில் அமைந்துள்ளது ரஷ்ய ஆளுகைக்கு உட்பட்ட பெல்கொரோட் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புடினுக்கு எதிரான கிரெம்ளின் ஃப்ரீடம் ஆஃப் ரஷ்யா லெஜியன் என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற கிரெம்ளின் ஃப்ரீடம் ஆஃப் ரஷ்யா லெஜியன் குழு டெலிகிராம் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

உறுமறைப்புச் செய்த சீருடைகளை அணிந்த ஆயுததாரிகள் ரஷ்யா சுதந்திரமாகிவிடும் என்றும் அத்துடன் பெல்கிரேட் நகரம் விடுதலையாகிவிட்டது என்றும் கூறிகிறார்கள். அவர்களின் சீருடையில் உக்ரைனின் கொடி பொறிக்கப்பட்டிருந்தது. கொசின்காவின் குடியேற்றத்தைக் கைப்பற்றியதாகக் கூறியது.

பெல்கிரேட் பிராந்தியத்தில் இரண்டு கிராமங்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதில் தென்பட்டவர்கள் அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. 

இதேநேரம் ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரேனிய நாசவேலை குழுவுடன் அதன் துருப்புக்கள் திங்களன்று போரிட்டு வருவதாக மாஸ்கோ கூறியது.

எல்லை தாண்டிய ஊடுருவல் குறித்து ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கிரெம்ளின் கூறியது.

பக்முட்டின் நிலைமையிலிருந்து கவனத்தை திசைதிருப்ப தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோ நம்புகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து தாக்குதல்களால் குறிவைக்கப்பட்ட தெற்கு பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், துருப்புக்களும் பாதுகாப்பு சேவையின் உறுப்பினர்களும் உக்ரைனில் இருந்து கடந்து வந்த நாசவேலை குழுவுடன் சண்டையிடுவதாகக் கூறினார்.

துருப்புக்களும், ரஷ்ய புலனாய்வு அமைப்பான பாதுகாப்பு சேவையின் உறுப்பினர்களும் எதிரிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்" என்று கிளாட்கோவ் கூறினார்.

இத்தாக்குதலுக்கும் எங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை உக்ரைன் ஆர்வத்துடன் கவனித்து வருகிறது, மேலும் நிலைமையை ஆய்வு செய்து வருகிறது என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறினார்.

No comments