வெடுக்குநாறியில் ஏணி பொருத்திய வழக்கு ; பூசாரி உள்ளிட்டோர் வழக்கில் இருந்து விடுவிப்பு!


வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்ல ஏணி பொருத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் இருந்து பூசாரி உள்ளிட்ட மூவரும் வவுனியா நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   

 நெடுங்கேணி பொலிஸார் தாக்கல் செய்த குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை  வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

தமிழ் மக்களின் புராதன வழிபாட்டுத் தலமான வவுனியா, நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தால் உரிமைகோரப்பட்டுள்ளது. .

இந்நிலையில், மலையில் ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி சேதமடைந்திருந்த நிலையில், புதிய ஏணியைப் பொருத்துவற்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் முற்கொள்ளப்பட்டிருந்தன. புதிய ஏணி பொருத்தப்பட்ட நிலையில், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொலிஸார் பணித்திருந்தனர்.

புதிய ஏணி பொருத்தப்பட்டமை தொடர்பாக மூவர் மீது பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் தொடர்வதா என்பதைத் தீர்மானிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். 

அதையடுத்து நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்திருந்த நிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களம் 

 திணைக்களம் சார்பில் முன்னிலையான நிசாந் நாகரட்ணம்  இருவார கால அவகாசத்துள் வழக்கு கோப்புகளை பரிசீலித்து மர ஏணியை அகற்றி இரும்பு ஏணியை பொருத்தியதால் தொல்பொருள் சின்னங கள் சேதம் ஏற்பட்டமை என்ற  

 குற்றச்சாட்டு  தொடர்பில் பூசாரி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் மீதும் முகத்தோற்ற அளவில் போதுமான

 சான்று இல்லை என்றும் வழக்கை இத்தோடு நிறுத்தி சந்தேகநபர்களை விடுவிக்கலாம் என்று மன்றுக்கு உரைத்ததையடுத்து  வழக்கில் இருந்து சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டு  வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

No comments