வெளிவருகிறது 3ஆம் சார்லசின் உருவம் பொறித்த புதிய நாணயங்கள்!

வெளிவரவுள்ள 50 பென்ஸ் நாணய குற்றி

பிரிட்டனில் மன்னர் 3ஆம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் 50 பென்ஸ் மற்றும் 5 பவுண்டுகள் உள்ளிட்ட நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

டியூடர் கிரீடத்தை அணிந்தபடி மன்னர் 3ஆம் சார்லஸின் உருவப்படம் இருக்கும் இந்த நாணயங்களை பிரிட்டனை சேர்ந்த சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.

மன்னர் 3ஆம் சார்லஸ் கீரிடம் அணிந்தபடி உள்ள இந்த நாணயங்கள் இம்மாதம் 24ஆம் திகதி புழக்கத்திற்கு வருகிறது.

ஏற்கனவே வெளிவந்திருந்த 50 பென்ஸ் நாணயக்குற்றி

No comments