யப்பானில் உலங்கு வானூர்தி விபத்து: 10 படையினரைக் காணவில்லை!!


யப்பானில் 10 பேருடன் சென்ற இராணுவ உலங்கு வானூர்தி கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

மியாகோஜிமா தீவருகே கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த UH-60 Black Hawk என்ற உலங்கு வானூர்தி ரேடார் கண்காணிப்பில் இருந்து தொடர்பு கிடைக்காமல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, யப்பானிய கடலோரக் காவல்படை இராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நீரில் மூழ்கிய உலங்கு வானூர்திகளின் உடைந்த பாகங்க ளைக் கண்டறிந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். 

No comments