பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் மாணவர்கள் மீது தாக்குதல்


பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த மாணவர்கள் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தியுள்ளது. 

அனுராதபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை உயர் தர மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை , பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று இரண்டு மாணவர்கள் மீது தலைக்கவசத்தால் மூர்க்க தனமாக தாக்குதல் நடாத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் அனுராதபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளி ஒருவரை கைது செய்துள்ளதுடன் , ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். 

No comments