யாழ்.நகர் கருவாட்டுக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை


கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த கால பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகள் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

அதன் போது , தெருவோரம் தூசுக்கள், மாசுக்களால் மாசடையக்கூடிய வகையில் கருவாடுகள் வைத்திருந்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். 

தெருவோரம் கருவாடுகள் வைத்து விற்பனை செய்வதாயின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. 

அத்துடன் கருவாடுகளை தூசு படியும் வகையிலும், அழுக்கான கறள் படிந்த கம்பிகளிலும் குத்தி தொங்கவிடப்பட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.

 கருவாடுகள் அனைத்தையும் பொலித்தீனால் மூடி தூசுக்கள் படாதவாறு காட்சிப்படுத்துமாறும் பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டது.

மேற்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டதுடன், கால அவகாசத்தின் பின்னரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாத வர்த்தகர்களிற்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்களால் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 




No comments