மகன்களை கிணற்றில் வீசி விட்டு உயிர்மாய்க்க முயன்ற தாய் - ஒரு மகன் உயிரிழப்பு


தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து உயிர் மாய்க்க முயற்சித்துள்ளார்.

கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது

தாயும் ஒரு மகனும கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் 21 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கபிதிகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments