மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு


மெக்சிகோவின் மத்திய மாகாணத்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுபான விடுதிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் 07 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments