துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: உயிரிழப்பு 5,000 பேராக உயர்வு!


துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட இருவேறு நிலநடுக்கத்தில் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்புப் பணி தொடர்கிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல மணி நேரங்களுக்குப் பிறகு மற்றொரு 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,419ஆக உயர்ந்துள்ளது.  15,384 பேர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து 7,340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 6,217 கட்டிடங்கள் இடிந்துவிட்டன.

சமநேரத்தில் சிரியாவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1293 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,411 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சிரியாவின் அலெப்போ, ஹமா, லதாகியா மற்றும் டார்டஸ் மாகாணங்கள் உட்பட அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 1,444 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறைந்தது 700 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,000 பேர் காயமடைந்தனர், வெள்ளை ஹெல்மெட் மீட்புக் குழு, எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்தது.


No comments