தடியெடுத்து நல்ல பெயர் எடுக்கும் ஆமி!யாழ்ப்பாணத்தில் கலங்கன்னி வலைத்தொழில் செய்யும் கடற்றொழிலாளர்களுக்கு ஊண்டு தடிகளை ஆக்கிரமிக்கப்பட்ட பலாலியிலிருந்து வெட்டி வழங்கி நல்ல பெயரெடுத்துள்ளது இலங்கை இராணுவம்.மீனவர்கள் தடிகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் டக்ளஸிடம்; விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இராணுவத்தின் உதவியுடன் தடிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று குறித்த தொழிலாளர்களுக்கு தடிகளை கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

பலாலியிலிருந்து விரட்டப்பட்ட பகுதியிலிருந்து அதே சொந்த கிராமங்களிலிருந்து தடிகளை வெட்டிக்கொடுத்து நல்ல பெயர் எடுத்துள்ளது இராணுவம். 

No comments