யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் ; காவலாளி மீது வாள் வெட்டு முயற்சி!


யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு  இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,

பட்டா ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயில் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களை தடுக்க முயன்றபோது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா்.

இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

சம்பவம் தொடா்பாக, யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து,  பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.


No comments